மங்கையர்கரசி
நித்தம் நித்தம் சேர்த்த ரத்தம்
கொண்டு என்னை ஈன்றெடுத்தவள்
சத்தம் சத்தம் கொண்டு அழுத
போதெல்லாம் ரத்தம் கொண்டு ஊட்டியவள்
அர்த்தம் அர்த்தம் இன்றி அழுத
போதெல்லாம் அதோ பார் நிலா என்று அள்ளி அணைத்தவள்
ஆட்டம் பாட்டம் என்று விளையாடிய
போதெல்லாம் அழகாய் அமர்ந்து ரசித்தவள்
தூக்கம் தூக்கம் இன்றி விழிகள் வாடிய
போதெல்லாம் ஆராரோ ஆரிராரோ என்று தாலாட்டியவள்
யுத்தம் யுத்தம் என்று மனம் போர்க்கொள்ளும்
போதெல்லாம் சாந்தம் சாந்தம் என்று மனதை வருடியவள்
பாசம் பாசம் மனம் ஏங்கிய
போதெல்லாம் மடியில் சாய்த்து தலைமுடி கோதி
நெற்றியில் முத்தமிட்டாள் என் அன்பு அன்னை
என் உலகின் முதல் மங்கை
இன்னும் இவ்வுளகில் எத்தனை உள்ளதோ
அத்தனையும் செய்தவள் - இவள்
மரணம் மரணம் என்ற நிலையை அடைந்தால்
ஓ வென்று அழுவானோ இல்லை இல்லாமல் போவானோ - இவன்
இன்னும் இன்னும் ஒரு ஜென்மம் பெற்றிருந்தால்
பிறப்பான் நிச்சயம் பிறப்பான் அதுவும் பெண்ணாய் பிறப்பான்
அவளை ஈன்றெடுப்பான், இன்றேல் அவள்
செய்தமைக்கு ஈடு இணை செய்யலாகாது.
No comments:
Post a Comment