அன்புடைமை- உலகம் இழந்த உடமை
சின்ன வயசுல நிறைய குறள் படிச்சுறுகென் . நிறைய பாதிச்ச குறள் அன்புடைமை.
1.அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும். |
பொருள் |
அன்புக்கும் அடைத்துவைக்கும் தாழ் உண்டோ ? அன்புடையவரின் சிறு கண்ணீரே (உள்ளே இருக்கும் அன்பைப்) பலரும் அறிய வௌதப்படுத்திவிடும். |
2. அன்பிலார் எல்லாம் தமக்குரியர்: அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. |
பொருள் |
அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வர்; அன்பு உடையவர் தம் உடம்பையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.
3.அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு. | பொருள் | அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன் என்று கூறுவர்.
4.அன்புஈனும் ஆர்வம் உடமை: அதுஈனும் நண்புஎன்னும் நாடாச் சிறப்பு. | பொருள் | அன்பு, பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்; அஃது எல்லோரிடத்திலும் நட்பு என்று சொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும். |
|
|
5.அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு. |
பொருள் |
உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன் என்று கூறுவர்
6. அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை. | பொருள் | அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்; ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்கும் அதுவே துணையாக நிற்கின்றது.
7.என்பு இலதனை வெயில்போலக் காயுமே அன்பு இலதனை அறம். | பொருள் | எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவதுபோல், அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.
8.அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரம்தளிர்த் தற்று. | பொருள் | அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர்வாழ்க்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது. 9.புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு? | பொருள் | உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்?
10.அன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. | பொருள் | அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்; அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல் போர்த்த வெற்றுடம்பே ஆகும் |
|
|
|
|
|
No comments:
Post a Comment